சாத்தான்குளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்..! என்ன நடந்தது..?

596

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்விளை இந்திராநகரை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 15 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். வடலிவிளை பாலத்தின் கீழ் டிரம்முக்குள் சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முத்தீஸ்வரன், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். இதனிடேயே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது.

ஆனால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 3 சென்ட் நிலம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாத‌தால், உறவினர்கள்  உடலை வாங்க மறுத்து விட்டனர். இதனால் சிறுமியின் உடல் மீண்டும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 4 லட்சம் ரூபாயும், வீட்டு மனை பட்டாவும், சிறுமியின் சகோதரர் படிப்பு செலவை அரசே ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே சிறுமி பாலியல் ரீதியாக எந்த துன்புறுத்தலும் செய்யப்படவில்லை என்றும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.