கள்ளக்காதலுக்கு இடையூறு..! மனைவி போட்ட பலே பிளான்..! தூக்கில் தொங்கிய கணவன்..?

2547

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு பவானி என்ற மனைவியும், சவுமியா, மோனிகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். போதைக்கு அடிமையான சரவணன், தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 2-ஆம் தேதி அன்று, மது குடிக்க பணம் தரவில்லையென்று, சரவணன் தூக்கில் தொங்கி சூசைட் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆம், மனைவியே அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சரவணனின் மனைவி பவானிக்கும், அவர் வேலை செய்யும் கம்பெனியின் ஓனர் வேலாயுதம் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இவர்களது உறவிற்கு, சரவணன் இடையூறாக இருப்பதால், இருவரும் திட்டம் போட்டு கொலை செய்துவிட்டு, சூசைட் செய்துகொண்டதாக வழக்கை திசை திருப்பினர். உடற்கூராய்வின்போது, இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகள் அம்பலமானது.

இதையடுத்து பவானி மற்றும் அவரது கள்ளக்காதலன் வேலாயுதம் ஆகிய இருவரையும் காட்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். கள்ள காதலுக்காக தாலி கட்டிய கணவனை, மனைவியே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of