எரித்துக்கொல்லப்பட்ட திருச்சி சிறுமி – வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

562

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் சித்ரா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). 9ம் வகுப்பு படித்து வந்த அவர், நேற்று மதியம் முதல் மாயமானார்.

இந்நிலையில் எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இறந்த இடத்தை காட்டிய அவரது உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு சிறுமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது வீடியோ பதிவும் எடுக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்துள்ளது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமி கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of