மாணவ-மாணவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் புதிய சீருடைகள் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

332

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. கணினி வகுப்புகள் ஸ்மார்ட் வகுப்புகள் ‘கியூ-ஆர்’ குறியீடு புத்தகங்கள் என்று அரசு பள்ளிகளில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

சீருடையிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்கட்டமாக 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தனி சீருடையும் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தனி சீருடையும் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும் இந்த கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டம் போட்ட இளம்பச்சை நிற அரைக்கை சட்டையும் கரும்பச்சை நிற அரைக்கால் டவுசரும் மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும் குட்டை பாவாடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டம் போட்ட சந்தன நிற சட்டையும் சந்தன நிற பேன்ட்டும், மாணவிகளுக்கு அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன் சுடிதாரும் சீருடையாக வழங் கப்பட உள்ளது. ஒவ்வொரு மாணவ-மாணவிகளுக்கும் தலா 4 ஜோடி சீருடைகள் வழங்கப்பட உள்ளது.

வேளச்சேரி அரசு மேல் நிலைப்பள்ளியில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 40 லட்சத்து 56 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு ரூ.409 கோடியே 30 லட்சம் மதிப்பில் சீருடை வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவும் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் ஒவ்வொரு மாணவருக்கும் 4 ஜோடி சீருடைகள் வழங்கப்பட உள்ளது. 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த மாத (ஜூன்) இறுதிக்குள் 2 ஜோடி புதிய சீருடைகள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மற்ற 2 ஜோடி சீருடை வழங்கப்பட இருக்கிறது. இந்த சீருடைக்கான துணிகள் கைத்தறித்துறை மூலம் தயாரித்து வழங்கப்படுகிறது. சமூக நலத்துறை மூலம் சுயஉதவி மகளிர் குழுக்களால் சீருடையாக தைத்து கொடுக்கப்படுகிறது என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of