அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் அறிவிப்பு..! புதியதாக வந்த சிக்கல்..?

1197

வைரஸ் தொற்று அதிகமாக பரவி வந்த காரணத்தால், பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், கல்லூரிகளை பொறுத்தவரை, இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதோடு சேர்த்து, அரியர் தேர்வுக்கு விண்ணபித்த மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவித்ததால், மாணவர்கள் பலர் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

இந்நிலையில், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, தேர்வு வைக்காமல் ஆல் பாஸ் வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மின்னஞ்சல் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆல் பாஸ் வழங்குவது ஏ.ஐ.சி.டி.இ கொள்கைகளுக்கு எதிரானது என்றும், இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது கிடையாது. இருப்பினும் இதனால் அரியர்ஸ் மாணவர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.