“4 சொட்டுகள்.. அவனை குடிக்க வை..” சுஷாந்த் விவகாரத்தில் ரியாவின் பகீர் ஆடியோ..?

680

இந்த வருடத்தில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதில், இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரம்.

ஆரம்பம் முதலே மர்மங்கள் நிறைந்த வழக்காக இருந்த சுஷாந்தின் தற்கொலை, தற்போது புதிய அத்தியாத்தை எட்டியுள்ளது.

இந்த வழக்கை, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் ஏற்கனவே விசாரித்து வந்த நிலையில், தற்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகமும் விசாரிக்க இருக்கிறது. நடிகையும், சுஷாந்தின் தோழியுமான ரியாவின் வாட்ஸ்அப் ஆடியோ வெளியானதே இதற்கொல்லாம் காரணம்.

அதாவது, பண பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக ரியாவின் ஆடியோவை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது. அப்போது அவர் டெலிட் செய்த சில ஆடியோக்களும் கிடைத்துள்ளது.

அதில், போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் பேசிய ரியா, ஒரு குறிப்பிட்ட போதைப்பொருளின் பெயரை சொல்லி, இதை நாங்கள் பயன்படுத்தியதில்லை. அது உங்களிடம் இருக்கிறதா என்று கேட்கிறார்.

இந்த ஆடியோ மட்டுமின்றி, சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புபடுத்தப்படுத்தும் வகையிலான ஆடியோவும் வெளியாகியுள்ளது. அதில், சாஹா என்ற நபருடன் ரியா பேசுகிறார்.

அப்போது, பெயர் குறிப்பிடாமல் ஒரு பொருளை குறிப்பிட்டு, காஃபி, நேநீர் அல்லது தண்ணீரில் 4 சொட்டுகளை பயன்படுத்தி, அதனை அவனை குடிக்க வை. 30 – 40 நிமிடங்களில் எல்லாம் நடக்கும் என்கிறார் சாஹா. அதற்கு ரியா, மிக்க நன்றி என்கிறார். இந்த வாடஸ் அப் உரையாடல் தான் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.