60 நாடுகளில்.. நாளுக்கு நாள் பலம் பெறும் உருமாறிய பெருந்தொற்று.. அதிர்ச்சி தகவல்..

1918

பிரிட்டனில் பரவத்தொடங்கிய உருமாறிய பெருந்தொற்று வைரஸ் உலக நாடுகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால், அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் துண்டித்துள்ளன.

இதனிடையே, பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலர் உருமாறிய பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, இந்தியாவில் உருமாறிய வைரஸால் 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உலகின் 60 நாடுகளில் உருமாறிய பெருந்தொற்று வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement