கூட்டம் குறைவாக இருக்கும்போது ஓட்டு போடனுமா? தேர்தல் ஆணையத்தின் புதிய ஏற்பாடு!

542

2019 ஆம் ஆண்டுக்கான 2 ஆம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அணைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகளில் எவ்வளவு பேர் வரிசையில் நிற்கின்றனர், எவ்வளவு கூட்டம் உள்ளது என்பதை அறிவற்கு ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்திற்கு சென்று தங்களின், வாக்காளர் எண்ணை செலுத்தினால் போதும். உடனே உங்கள் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி, அங்கு எத்தனை பேர் உள்ளனர், கியூவில் நிற்பவர்கள் எத்தனை பேர், கூட்டம் குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என்பது குறித்த தகவல்கள் தெரிந்துவிடும்.

இதோ அந்த இணையதள முகவரி:-

http://ecapp0155.southindia.cloudapp.azure.com/polling_queue/queue.aspx