வீட்டின் மீது மோதி வெடித்து சிதறிய விமானம்

560

அமெரிக்கா நியூயார்க் நகரத்தில் விமானம் வீட்டின் மீது மோதிய விபத்தில் விமானத்தில் பயணத்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க் அருகே உள்ள டச்சஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது சிறு ரக விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. அதில் விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் விபரங்கள் தெரியவில்லை என்று அமெரிக்க மத்திய விமான நிர்வாகம் கூறியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of