மீண்டும் இந்தியாவிற்கு பயத்தை காட்ட நாங்கள் தயார்…, நியூசிலாந்த் கேப்டன்

401

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையாக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 80 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி, இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா தோற்றால் நிச்சயம் தொடர் நியூசிலாந்து வசம் சென்றுவிடும்.

இதனால், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதே நேரம், நியூசிலாந்து அணி சோந்த மண்ணில் நடைப்பெற்ற ஒரு நாள் போட்டியில் படு தோல்வியை சந்தித்தது. இதற்கு ஈடுகட்டும் வகையில் டி20 போட்டி தொடரிலாவது வெல்ல வேண்டும் என்ற நிலையில் இவர்கள் உள்ளனர்.

இதனால் இரண்டு அணிகளும் தங்கள் அணியை வலுபடுத்து கின்றனர். கடந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் பந்துவீச்சை பலப்படுத்த குல்தீப், கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்படலாம்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள போட்டி தொடர்பாக பேசியுள்ள நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், கடந்த டி20 சிறப்பான போட்டியாகும்.

இப்போட்டியில் இரு அணிகளின் பலமும், பலவீணமும் இரண்டு அணிகளும் நன்கு புரிந்து கொண்டோம்.

அதுமட்டுமின்றி, நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியை எங்கள் வீரர்கள் விழ்த்துவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of