“தோனி அதற்கு சரிபட்டுவரமாட்டார்” – தோனியை கலாய்த்த நியூசிலாந்து கேப்டன்..!

1265

மகேந்திர சிங் தோனி நியூசிலாந்து அணியில் இணைய தகுதியற்றவர் என கேப்டன் வில்லியம்சன் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைடைந்தது. தொடக்கத்தில் வரிசையாக விக்கெட்களை இழந்து தவித்த இந்திய அணியை ஜடேஜா – தோனி ஜோடியின் பொறுப்பான ஆட்டம் நம்பிக்கை அளித்தது.

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அபாரமாக ஆடி அரைசதம் விளாசி போட்டியின் இறுதிக்கட்டத்தில் அவுட்டானார். இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன்அவுட்டாகி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்த வெற்றிக்குபின் நியூசிலாந்து அணி கேப்டன் கேன்வில்லியம்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோனியை உங்களது அணியில் இணைத்து கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

தோனி உலக தரம் வாய்ந்த வீரர். போட்டியின் பரபரப்பான கட்டத்தை எதிர்கொள் அனுபவம் மிகவும் தேவை. இந்த தொடர் முழுவதும் அவரது பங்களிப்பு சிறந்தாக இருந்தது.

நியூசிலாந்து அணியில் அவர் இணைய வேண்டுமென்றால் அவரது தேசிய அடையாளத்தை மாற்ற வேண்டும். ஒருவேளை அதை மாற்றினால் அவரை அணியில் சேர்க்கலாம் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

மேலும் இந்தியா அணியை வீழ்த்தி நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளோம். இதனால் அவர்கள் எங்கள் மீது வருத்தத்தில் இருந்தாலும் கோபத்தில் இருக்கமாட்டார்கள் என நினைப்பதாக வில்லியம்சன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of