டி20-யில் இந்தியாவை பழிவாங்கிய நியூசிலாந்த்

629

 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு தோல்வியை பரிசளித்தது.

இதையடுத்து டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்கமுதலே தங்களின் அதிரடியை காட்டி ரன்களை குவிக்கத்தொடங்கினர். அவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதில் தவுடி புடியாக்கினர். முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்தபோது, கோலின் மன்ரோ 34 ரன்னில் வெளியேறினார்.

எனினும் அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தன்னுடைய வழக்கமான அசுரவேகத்தை காட்டத்தொடங்கினார். தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்பெர்ட் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் நியூசிலாந்தின் ரன் வேட்டை சற்று குறைந்தது.

இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடத்தொடங்கியது.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்த நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய அணியின் வீரர்கள் திணறத்தொடங்கினர். ஆரம்ப ஆட்டக்காரர்களின் தடுமாற்றம் அடுத்து வரும் வீரர்களையும் பயமடைய வைத்தது.

இருப்பினும், தோனி தன்னுடைய நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார் இருப்பினும் அவரும் 39 ரன்களில் ஆட்டமுழக்க அடுத்து வந்த வீரர்கள் அணைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் இந்திய அணி 139 ரன்னிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 80 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் தோனி சிறப்பான ஆட்டத்தையும், புவணேஷ், பாண்டியா சிறப்பான பந்து வீச்சையும் வெளிப்படுத்தினர்.

அடுத்த டி20 போட்டியில் வெற்றியை தன்வசமாக்க இந்தியா தீவிர பயிற்சியில் ஈடுபடயுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of