நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி..!

814

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2-வது 20 ஓவர் போட்டி அதே ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

அதனை தொடந்து 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் விராட் கோலி (11 ரன்கள்) டிம் சவுதி வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஜொடி சேர்ந்த கே.எல்.ராகுல்-ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, இந்த ஜோடி பிரிந்தது. இறுதியாக இந்திய அணி 17.3 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 133 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியின் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of