இன்றும் ஆட்டம் பாதித்தால்..? – இந்திய அணிக்கு வாய்த்த புது அதிர்ஷ்டம்..!

676

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – நியூசிலாந்து மோதிய அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் பாதிக்கப்பட்டது. அரையிறுதிப் போட்டி என்பதால் விட்ட இடத்தில் இருந்து போட்டி இன்று மீண்டும் தொடங்கவுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய, அரையிறுதிப் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரஃபோர்டு (Old Trafford) மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய, அரையிறுதிப் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரஃபோர்டு (Old Trafford) மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நடப்புத் தொடரில், இதே மைதானத்தில் முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகளிலும் முதலில் ஆடிய அணிகளே வெற்றிபெற்றன.

மழை அச்சுறுத்தல் இருந்த போதும், இதை கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்தார். ஆனால், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை, கப்தில் காலில் வாங்கியதால், LBW கேட்கப்பட்டது. ரிவியூவில் அது ஸ்டெம்பில் இருந்து விலகிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, நியூசிலாந்து தொடக்க ஜோடி 17-வது பந்தில் தான் முதல் ரன் சேர்த்தது.

தொடர்ந்து தடுமாறிய மார்டின் கப்தில், ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.சற்று தாக்குப் பிடித்து ஆடிய மற்றொரு தொடக்க வீரர் நிகோலஸ், தனது பங்கிற்கு 28 ரன்கள் சேர்த்தார்.

பின்னர், கைகோர்த்த கேன் வில்லியம்சன் – ரோஸ் டெய்லர் அணியை சரிவில் இருந்து மீட்கும் நோக்கில் ஆமை வேகத்தில் ஆடினர். வில்லியம்சன் 67 ரன்கள் சேர்த்து சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ரோஸ் டெய்லர் அரைசதம் கடந்தார். இதையடுத்து, ரன் விகிதம் சற்று உயர்ந்தது. 46.1 ஓவரில், நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது.

அரையிறுதிப் போட்டி என்பதால், மாற்று நாளான இன்று போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன், நியூசிலாந்து விட்ட இடத்தில் இருந்து எஞ்சிய ஓவர்களையும் இன்று விளையாடும். பின்னர், இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடும்.

மேலும், இன்றும் மான்செஸ்டரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மழையால் இரண்டாம் நாளான இன்றும் ஆட்டம் பாதிக்கப்பட்டால், லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததன் மூலம், இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of