இந்தியா – நியூசிலாந்து போட்டி : ”தனி நாடு” கேட்டு போராடிய இந்திய ரசிகர்கள் 4 பேர் கைது..!

758

நேற்றைய இந்தியா – நியூசிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் “தனி நாடு’’ கோரி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மான்ஸிஸ்டரில் நடைபெற்றது.


இந்த போட்டியின்போது சீக்கியர்களுக்கு தனிநாடு வேண்டும் என கோரி மைதானத்தில்  4 பேர் கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த டிஷர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விரைந்து வந்த அந்த நாட்டு போலிசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் காலிஸ்தான் என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள்.


இதே போன்று இலங்கை – இந்தியா இடையேயான போட்டியில் “காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் விமானம் ஒன்று மைதானத்திற்கு மேல் பறந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of