குழந்தைகளுக்கு பெயர் கொடுத்த அபிநந்தன்!!

227

புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்தியாவின் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 போர் வீர மரணம் அடைந்தனர்.

இதன் காரணமாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வந்தது. இந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

இவரை நேற்று பாகிஸ்தான் ராணுவம் விடுவித்தது. இந்நிலையில் இவரின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக, ராஜஸ்தானில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அபிநந்தன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும், இதேபோன்று பஞ்சாபில் பிறந்த குழந்தை ஒன்றிற்கும் அபிநந்தன் என்ற பெயர் கிடைத்துள்ளது.