புதுமண தம்பதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை!

497

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமண தம்பதியினர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சஹானா பானு, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். குடும்ப வறுமை காரணமாக அவ்வப்பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இருவரும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்