தாய் வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி..! ரூம் போட்டு தூக்கில் தொங்கிய கணவர்.. !

872

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரைச் சேர்ந்தவர் அன்பு. நரசிங்கபுரம் பெரியமேடு லோகேஷ்வரி என்பவருக்கும் 4 மாசத்துக்கு முன்னாள் கல்யாணம் ஆனது.

கடந்த 15ஆம் லோகேஷ்வரி திடீரென தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தார்.. வீட்டில் யாருமே இல்லாத சமயம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை கண்டு கதறி அழுத குடும்பத்தினர் என் பொண்ணு மேல எல்லாரும் சந்தேகப்பட்டுட்டாங்க.வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தினாங்க.. அதனாலதான் தற்கொலை செய்துக்கிட்டாள் என்று பெற்றோர் கதறி அழுதனர்.

உடனே போலீசிலும் இதைபற்றி புகார் தந்தனர். அதனால் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீஸாரும் விசாரணை நடத்தி வந்தனர். லோகேஷ்வரியின் கணவர் அன்பு ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஒரு லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவருடைய உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒருவேளை வரதட்சணை கொடுமை, சந்தேகம்தான் இந்த தற்கொலைக்கு காரணம் என தன் மீது புகார் தந்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்தே அன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. தாய் வீட்டில் மனைவி தூக்கில் தொங்கிய சம்பவமும் ரூம் போட்டு கணவன் தூக்கில் தொங்கிய சம்பவமும் அடுத்தடுத்து பரபரப்பை தந்துள்ளது.