புது மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – அம்பலமான கணவன் நாடகம்

1361

திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் மல்லாண்டபட்டியை சேர்ந்த சென்ராயனுக்கும், ஜோலார்பேட்டை கவுண்டனூர் பகுதியை சேர்ந்த வரலட்சுமிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல், சென்ராயன் வரதட்சணை கேட்டு, வரலட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சென்ராயன் நேற்று குடிபோதையில் தாக்கிய போது, வரலட்சுமி உயிரிழந்தார். இதையடுத்து மனைவியின் உடலை கிணற்றில் போட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சென்ராயன் நாடகமாடியுள்ளார்.

விசாரணையில் வரலட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, தப்பியோடிய சென்ராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement