பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர் கைது..!

255

நெய்வேலியைச் சேர்ந்த திருமணம் முடிந்த 26 வயது பெண் ஒருவர், வடலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் பணியில் இருக்கிறார்.

பணி நிமித்தமாக நாள்தோறும் அவர் நெய்வேலியில் இருந்து வடலூருக்கு தனியார் பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்போது, அந்த பேருந்தில் நடத்துநராக பணிபுரியும் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடன் பேசி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சுந்தரமூர்த்தியிடம் அந்தப் பெண் பேச மறுத்துவிட்டார். இந்நிலையில் நேற்று காலை தனது நிறுவனத்தில் இருக்கையில் அமர்ந்து அந்த பெண் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெட்ரோல் கேனுடன் சென்ற சுந்தரமூர்த்தி, திடீரென அப்பெண் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சுந்தரமூர்த்தியை போலீஸில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of