NGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு! இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

392

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் என்.ஜி.கே. இந்த படத்தில், சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையே நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு ட்விட்டர் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளளது.

இன்று NGK படத்தின் தனிக்கை குழு பற்றிய அறிவிப்பும், சூர்யா ரசிகர்களிடையே நேரலையில் பேச இருப்பது, டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என்றே சொல்லலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of