இறுதிக்கட்டத்தில் என்.ஜி.கே,… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

245

இயக்குநர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் படம் என்.ஜி.கே, கதாநாயகிகளாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு என்.ஜி.கே-வை தயாரிக்கிறார்கள். தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம் செல்வராகவனின் உடல்நல பிரச்னைகளால், தள்ளிப்போனது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தின் கடைசி கட்ட படபிடிப்பு துவங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இது முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதனால் கொண்டாட்ட சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.