சுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை

398

சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது புகார் அளித்தார்.

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இந்த புகாரையடுத்து ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது ராஜீவ் நகர் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். பண மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டதால், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி நாளை ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement