“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்

281

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை தான் காதலிக்கவில்லை என்றும், அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பர் என்றும், நடிகை நிதி அகர்வால் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய பின், மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்தி சினிமா உலகின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இருவரும் காதலிப்பதாகவும், ஒன்றாகவே பல இடங்களுக்கும் செல்வதாகவும், சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன.

கூடவே, இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களும் வெளியாகின.இந்நிலையில், இது குறித்தெல்லாம் நடிகை நிதி அகர்வால் கூறியிருப்பதாவது;

என்னையும், ராகுலையும் வைத்து ஆயிரம் கதை எழுதி விட்டனர். நான், ஒரு கிரிக்கெட் ரசிகர். அந்த விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

உலகக் கோப்பை போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளைப் பார்ப்பதற்காக, நான், போட்டி நடந்த சமயத்தில் லண்டன் சென்றிருந்தேன். அப்போது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரையும் நேரில் சந்தித்தேன்.

அந்த சமயத்தில், கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலையும் சந்தித்தேன். அவரோடு, நிறைய நேரம் பேசினேன். அப்போது முதல், அவர் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார். அவ்வளவுதான்.

அதை வைத்து, காதல் என்றும், திருமணம் என்றும் கிளப்பி விட்டு விட்டனர். அதெல்லாம் ஒன்றும் இல்லை. உலகக் கோப்பை நடந்தபோது, இருவரும் சந்தித்த சூழலில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்தப் படங்களை வைத்துத்தான், கதை கட்டுகின்றனர்.இவ்வாறு நிதி கூறியிருக்கிறார்.