பழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..!

414

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதரா சரிவு குறித்து விளக்கம் அளிக்க ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“ஆட்டோ மொபைல் துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவு குறித்து எல்லோரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டு வரும் சரிவுகளை சரி செய்ய வேகமாக செயலாற்றி வருகிறோம்.

ஆட்டோமொபைல் துறையை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வாகனங்களை அதிகமாக வாங்குவதற்கு வசதியாக வாகன கடன் வட்டி குறைக்கப்படும்.

பழைய வாகனங்களை ஒப்படைத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்க வேண்டும். பழைய வாகனங்களை அரசு கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்கும்.

இந்திய பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து அடுத்த வாரம் மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படும்.”

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of