பஞ்சாப் நேஷனல் வங்கியை திவாலாக்கிய மோசடி மன்னன் நீரவ் மோடி லண்டனில் ஊர் சுற்றும் புகைப்படம்

257

பஞ்சாப் நேஷனல் வங்கியை திவாலாக்கிய வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததாக செய்தி வந்தது. இதனையடுத்து அவனை தேடுவதற்கு இந்திய அரசாங்கம் பல முயற்சி எடுத்தது ஆனால் அவன் கிடைக்கவில்லை.

இன்று தி டெலிகிராப் என்ற ஆங்கில நாளேடு லண்டனில் நீரவ் மோடியை மக்கள் அதிகமாக புழங்கும் மார்க்கெட் பகுதியில் கண்டுபிடித்தார்கள்.

nirava modi

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் இல்லை பதில் இல்லை என்ற ஒரே பதிலாக கூறி டாக்ஸியில் ஏறி தப்பித்து போகும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்திய அரசாங்கம் நீரவ் மோடியை கண்டுபிடிப்பதற்கு மேலும் தாமதப்படுத்துவார்கள் அல்லது இந்த ஆதாரத்தை வைத்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்வார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.