நிர்மலா தேவி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

142

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்ட  நிர்மலா தேவி, நெஞ்சுவலி காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் ஆளுநர் அலுவலகம் முதல் ஆளும் கட்சி அமைச்சர்கள் வரை தொடர்பு இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறி வரும் நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் தன்னை காவல்துறையினர் மிரட்டுவதாக புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.