நிர்மலா தேவி வெளிவருவதில் சிக்கல்? – ஜாமீன் தாரராக முன்வர உறவினர்கள் மறுப்பு

255

நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், நிர்மலா தேவியை சிறையிலிருந்து அழைத்துச்செல்ல உறவினர்கள் ஜாமீன்தாரராக முன்வர மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக பேராசிரியை நிர்மலாதேவியை போலிசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் காமராஜர் பல்கலைக்கழக சில நிர்வாகிகள் உட்பட ஆளுனர் மாளிகை வரை தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் 1 வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த நிர்மலா தேவிக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. ஆனால் உறவினர்கள் யாரும் ஜாமீன் தாரராக முன்வராததால் நிர்மலா தேவி வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிர்மலா தேவியின் வழக்கறிஞர் உறவினர்களிடம் பேசி வருவதாக தகவல் வந்துள்ளன.