நிர்மலா தேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட்..!

442

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது 3 பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை தற்போது துவங்கியுள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் 2-வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி 3 பேரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி பரிமளா ஒத்திவைத்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of