மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : இருவருக்கு ஜாமீன்

508

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

nirmala case 2

கடந்த ஆண்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக கூறி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காமராஜர் பல்கலைக்கழக முக்கிய நிர்வாகிகள் தொடர்புள்ளதாக கூறிவந்தனர். இதனையடுத்து இவ்வழக்கில் தொடர்புடையவர்களாக முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் அவர் இதுகுறித்து விளக்கமளித்து விசாரணைக்குழு ஒன்றை அமைத்தார்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஆதரவாக வாதிடும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், இந்த வழக்கில் ஆளுனர் மாளிகையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கும், காமராஜர் பல்கலைக்கழக முக்கிய நிர்வாகிகளுக்கும்  தொடர்பு இருப்பதாக நிர்மலாதேவி கூறியிருப்பதாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக இதுகுறித்து வாய் திறக்காத நிர்மலா தேவி தன்னிடம் பெறப்பட்ட வாக்குமூலம் அனைத்தும் பொய்யானது எனவும், காவல்துறையால் மிரட்டியே வாங்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தொடர் மர்மங்கள் நீடித்துவரும் நிலையில் தற்பொழுது இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன்,கருப்பசாமி ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளது.