நிர்மலாதேவி வழக்கின், சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

201

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலாதேவி வழக்கின், சிபிசிஐடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்த காமக்கொடுமுகி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே கல்லூரி மாணவிகளிடம் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றவும், அதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க தடை விதிக்கவும் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலர் சுகந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்தமனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கையை டிசம்பர் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கீழ்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 10ஆம் ஒத்திவைத்தனர்.