நிர்மலா தேவிக்கு ஜாமீன்! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

396

கல்லூரி மாணவிகளை தறவாக நடத்த முயன்ற வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியையான நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பலமுறை ஜாமீன் மறுக்கபட்ட நிலையில், மதுரை பெண்கள் மத்திய சிறையில் தற்போது அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.நிர்மலாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மார்ச் 12ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கோ, தனிநபருக்கோ பேட்டி அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலாதேவி நாளை ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of