ஆளுநர் பதவி விலகும் வரை தொடரும் போராட்டம்

729

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் – பாராட்டும் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரையும், தமிழக அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

நிர்மலா தேவியின் ஜாமீன் மனு 8 முறை நிரகாரிக்கப்பட்டது, சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of