22 -ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராக உத்தரவு

237

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவி என்ற பேராசிரியை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு ஆஜராகி நிர்மலாதேவி வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும் அவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்து உள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது.

இந்த நிலையில், நிர்மலா தேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஆகவே அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார்.

அதை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of