இந்திய வங்கிகளை உலக தரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்

255

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சி.யூ.பி வங்கியின் 116வது ஆண்டு துவக்கம் விழா மற்றும் சி.யூ.பி வங்கியின் செல்போன் செயலி துவக்க விழாவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டில் உள்ள நிறுவனங்களின் செயல்திறமையை பொறுத்தே உள்ளதாக தெரிவித்தார்.

மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வங்கிகள் செயல்பட்டால் மக்கள் வங்கியை தேடி வரும் நிலை உருவாகும் என்றும், அதுவே வங்கிகள் நேர்மையாக செயல்படவில்லை என்றால் அதில் பணம் போட்டவர்கள், கடன் வாங்கியவர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.

எனவே வங்கிகளை திறமையாக கையாள வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of