ப.சிதம்பரத்திற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்..!

638

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும், இலக்குகளும் சாத்தியமானவையா என ப.சிதம்பரம் கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்து உரையாற்றினார். அப்போது ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி வருவாய் இலக்கை எட்ட முடியாது என்று கூறுவது தவறு என தெரிவித்தார்.

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ஜிஎஸ்டி வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்தார். பட்ஜெட்டில் வலுவான சீர்திருத்த திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது தவறு என கூறினார்.