60-வது பிறந்தநாள் கொண்டாடிய நிர்மலா சீதாராமன் – மம்தா பானர்ஜி வாழ்த்து

447

இந்தியாவின் 2-வது பெண் நிதித்துறை மந்திரி என்ற பெருமையை பெற்ற மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Image result for nirmala sitharamanநிர்மலா சீதாராமன் அரசியல்வாதிகளில் ஒருவராவார்.  இவர் இந்திய நடுவணரசின் நிதி அமைச்சராக பதவியில் உள்ளார்.  இப்பதவிக்கு முன்பு இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். 2019 மே 31 முதல் இந்திய நடுவணரசு நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார்.  இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் நிர்மலா சீதாராமன். Image result for nirmala sitharaman

நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாழ்த்துகள் நிர்மலா சீதாராமன். உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

Image result for mamata

இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement