இந்தியை திணிப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு – நிர்மலா சீதாராமன்

290

சென்னை கிண்டியில் ITC GRAND CHOLA ஹோட்டலில் நகரத்தார் வணிக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு இந்தியை திணிப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றார்.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த “ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங்” எனப்படும் விவசாய முறைக்கு இமாச்சல், மத்தியப்பிரதேசம், சிக்கிம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகள் சிறந்த உதாரணம் என நிதியமைச்சர் பதிலளித்தார்.

நீட் மசோதா தொடர்பான கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் பேசப்பட்டது பற்றி தான் கருத்து சொல்லமுடியாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நகரத்தார் சமூகம் நிர்வாகத் திறமைக்கு பெயர்போனது என்றால் அது ப.சிதம்பரத்திற்கு பொருந்துமா என செய்தியாளர்கள் கேட்டபோது ஒரு சமூகத்தை பற்றி பேசும்போது தனிநபர் பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என அவர் பதிலளித்தார்.