தீவிரவாதிகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கவே சர்ஜிக்கல் ஸ்டிரைக்

938

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிகவும் முக்கியமானது என்றும், தீவிரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தானின் தளங்களை அழிக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது எனவும் கூறினார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே விளக்கம் அளிக்கப்பட்டதாவும், இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்நோக்கத்தோடு பிரச்சினையை எழுப்பி வருகிறார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்ற நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நடைமுறையைத்தான் பின்பற்றியதாக தெரிவித்தார்.

Advertisement