நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..! தீர்ப்பு வழங்கிய உடனே நீதிபதிக்கு நடந்த சம்பவம்..!

559

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் தண்டனை நிறைவேற்றுவதை டெல்லி மாநில அரசு ஒத்திவைத்தது.

அந்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், தற்போது பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மற்ற 3 கைதிகள் இன்னும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை.

மேலும், வினய், அக்ஷய் இருவரும் மறுசீராய்வு மனுவை இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த வாய்ப்புகளால், அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருந்த நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்சநீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சிறை விதிகளின்படி, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு முன் அது குறித்த தகவலை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.

இதன்படி.நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்புடைய தகவல்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு திகார் சிறை நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of