‘மேகதாது விவகாரம்’ அதிமுக, திமுக எம்.பி.க்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு – நிதின் கட்கரி

382

மேகதாது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிமுக, திமுக தலைவர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்த்து வருகின்றனர்.

மேகதாதுவில் அணை கட்ட வழங்கிய அனுமதியை திரும்ப பெற கோரி அதிமுக, திமுக எம்.பி.கள் நாடாளுமன்றத்தில் அமளியிலும், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்டப்படாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும், திமுகவை சேர்ந்த மாநிலங்களை உறுப்பினர் கனிமொழிக்கும் நிதின் கட்கரி எழுதியுள்ளார்.

அதில் அதிமுக, திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காது என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக, திமுக கட்சி தலைவர்களும், எம்.பி.களும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of