மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்

506

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, திடீரென மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கப்பல்துறை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரி, அகமத்நகரில் உள்ள மகாத்மா புலே வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.

அதே மேடையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உட்பட பலர் இருந்தனர். விழாவில் தனது பேச்சை முடித்துவிட்டு இருக்கைக்கு திரும்பியபோது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே அவரை கிழே விழாமல் பிடித்துக்கொண்டனர்.

பின்னர் தண்ணிர் கொடுக்கப்பட்டு உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நிதின்கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் “விழாவில் கலந்து கொண்டபோது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விட்டதாகாவும், இதனால் தனக்கு மயக்கம் ஏற்பட்டது என்றும், தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவித்த அவர், தனது  உடல்நலம் குறித்து விசாரித்த நலம் விரும்பிகளுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of