பிரதமர் பதவி மீது ஆசையா? மத்திய மந்திரி கட்காரி

342

நடக்க இருக்கின்ற, பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி பிரதமர் பதவிக்கு வரக்கூடும் என ஊகங்களில் செய்திகள் பரவி வருகின்றனர்.

இதுபற்றி அவரிடம் செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்புகையில்,

அப்போது அவர், “நான் எந்த கணக்கும் போட வில்லை. இலக்குகளும் நிர்ணயிக்கவில்லை. இது அரசியலுக்கும் பொருந்தும், எனது பணிகளுக்கும் பொருந்தும். எனக்கு என்று ஒதுக்கப்பட்டதை நிறைவேற்றி உள்ளேன். நாட்டுக்கு என்னால் ஆன சிறந்தவற்றை செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என பதில் அளித்தார்.

மேலும், “பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை. நாடு தான் எனக்கு பெரியது. எனக்கு கனவுகள் இல்லை. நான் யாரிடமும் போய் நிற்க மாட்டேன். ஆதரவு தேடவும் மாட்டேன். நான் போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of