கரீபியன் தீவில் நித்யானந்தா.. கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம்

133

கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அடுத்தடுத்த பாலியல் புகார்களால் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். ஈகுவெடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி “கைலாசா” என பெயர் சூட்டி தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் நித்தியானந்தா இறங்கியதாக தகவல்கள் வெளியாகியது.

தனது கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாக, நித்யானந்தா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்ட அவர் தன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார். இதற்கிடையே சர்வதேச போலீஸ் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் நித்யானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of