பிக்-பாஸ் வீட்டையும் புரட்டிப்போட்ட நிவர் புயல்.. வெளியேறிய போட்டியாளர்கள்..

7278

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இதுவரை 4 பேர் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடுத்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அனைவரும் வெளியேறிவிட்டார்கள். அதாவது, பிக்-பாஸ் வீட்டின் செட், செம்பரம்பாக்கம் ஏரிக்கு மிகவும் அருகில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த ஏரியின் தண்ணீர் திறந்துவிடப்பட்டதும், செட் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்த போட்டியாளர்களை வெளியேற்றிய நிகழ்ச்சிக்குழுவினர், ஸ்டார் ஓட்டல் ஒன்றில் அறையெடுத்து, தங்க வைத்துள்ளனர்.

தண்ணீர் முழுவதுமாக நீங்கிய பிறகு, மீண்டும் பிக்-பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, இன்று பழைய எபிசோட் ஒளிபரப்பு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Advertisement