நிவர் புயல்.. நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை..

25606

நிவர் புயல் தீவிர புயலாக இருந்த நிலையில், தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை எழிலகம் பகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிவர் புயல் காரணமாக, கனமழை பெய்யும் என்பதால், நாளை அரசு பொது விடுமுறை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய முதல்வர், மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement