நிவர் புயல்.. நாம் பாதுகாப்பாக இருக்கு சில முன்னேச்சரிக்கைகள்

3472

நிவர் புயல்…  இப்புயல் 25 தேதி காரைக்கால்-மாமல்லபுரம் இடயே கரையை கடக்கும்னு இந்திய வானிலை ஆய்வு மையமும்,மண்டல் ஆய்வு மையமும் சொல்லியிருக்காங்க..

இப்புயல் கரையை கடக்கும் போது பலத்த புயல் காற்றுடன் சில மாவட்டங்களில் மழைபெய்யும் சில பாதிப்புகளும் ஏற்படும். பொதுவாக புயல் கரையை கடந்தலே பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அது போல இப்புயல் கரையை கடக்கும் போது.. என்ன நடக்கும் என்று தெரியல.. ஆனால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்கு பேரிடர் மேலாண்மை குழு அவர்கள் பக்கம் இருந்து பல  முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர். நம் ஒவ்வொரு மக்களும் செய்ய வேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டிருக்கிறது.

புயல் கரையை கடந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்:

1. அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பின்பே வெளியே செல்ல வேண்டும்

2. அறுந்து விழுந்த மின்சார கம்பிகள் மீது கவனம் தேவை

3. ஈரமாக இருப்பின் மின் சாதனைங்களை உபயோகிக்க வேண்டாம்

4. சுற்றுப்புறத்தினை சுத்தமாக வைப்பதோடு கிருமிநாசினிகளை தெளிக்கவும்

5. மழை காலங்களில் பாம்பு மற்றும் பூச்சி கடிகளை தவிர்க்க கையில் தடியை எடுத்து கொள்ளவும்.

புயல் நேரத்தில் பாதுகாப்பு குறிப்புகள்:

1. காய்ச்சிய குடிநீரை பருகவும்

2.சுகாதாரமான உணவை உண்ணவும்

வெளியில் இருக்கும் மக்களின் கவனத்திற்கு

1. பழுதடைந்த கட்டங்களுக்குள் நுழைய வேண்டாம்

2. மரங்கள்,மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு அருகில் நிற்க வேண்டாம்

3. அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ அல்லது பாதுகாப்பான கட்டத்திலோ தங்க வேண்டும்.

4.அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

5 மீனர்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

6. படகுகளுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டு படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவும்.

7. இந்திய வானிலை ஆய்வு மையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் டுவிட்டர் மற்றும் tn smart செயலி மூலம் பகிரப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். தொலைக்காட்சி, வானொலி, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் டுவிட்டர் போன்றவற்ற பின் தொடரவும்.

வீட்டில் இருப்போர் கவனத்திற்கு:

1. பதற்றப்படாமல் இருக்க வேண்டும்
2. ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்தல் நல்லது.

ஏழு நாட்களுக்கு தேவையான அவசர உதவி பெட்டகம் அதாவது, கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு, தீப்பெட்டி, பேட்டரி, மருத்துவ கட்டு, கத்தி உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட உதவி பெட்டகத்தை
தயாராக வைத்திடுக்க வேண்டும்.

புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் திடீரென்று குறையும், அதனால் புயல் கரையை கடந்து விட்டதாக எண்ண
வேண்டாம்.

மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக் காற்று பலமாக வீசும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியே செல்ல வேண்டாம்.

மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம், புயல் நேரத்தில் பயணிக்கவும் வேண்டாம்.

எனவே இந்த விதிமுறைகளை பின்பற்றி பேரிடர் மேலாண்மை குழுவுடன் நாமும் சேர்ந்து பெரும் பாதிப்பு தவிர்ப்போம்..

Advertisement