ரஜினிக்கு மகளாகும் கமலின் மகள்?

660

காலா, கபாலி என வயதான தோற்றத்தில் நடித்திருந்த ரஜினி, பேட்ட படத்தில் தான் மீண்டும் இளமையான, ஸ்டைலீசான தோற்றத்துக்கு மாறி இருந்தார். தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக, பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறார் என்றால் நிச்சயம் வயதான தோற்றத்தில் மீண்டும் ரஜினி நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of