நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் அடுத்த நடிகை | Nivetha Pethuraj

1168

நிவேதா பெத்துராஜ், ஒருநாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

nivetha

அதன் பிறகு ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் படங்களும் வெளியாக இருக்கின்றன. மேலும் ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. நயன்தாரா, அனுஷ்கா, அமலாபால் ஆகியோர் கதாநாயகர்களுக்கு ஜோடியாக ஒரு பக்கம் நடித்தாலும் இன்னொரு பக்கம் தங்களுக்கு முக்கியத்துவம் படங்களிலும் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் நிவேதாவும் இணைந்துள்ளார்.