NLC விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் – நெய்வேலியில் நாளை கடைகள் அடைப்பு

89

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடைகள் அடைக்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் ஆயிரத்து 470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே, என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடைகள் அடைக்கப்பட உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of